Home News Kollywood சத்யராஜ் நடித்தால் சரியாக இருக்காது ; முதலில் மறுத்த பிரின்ஸ் இயக்குனர்

சத்யராஜ் நடித்தால் சரியாக இருக்காது ; முதலில் மறுத்த பிரின்ஸ் இயக்குனர்

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நேரடியாக தெலுங்கில் நடித்துள்ள படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரிஷபோப்ஸ்கா என்பவர் நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை வேடத்தில் சூரி நடித்துள்ளார்.

இந்த படம் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நடிகர் சத்யராஜ் பேசுகையில் ஒரு ஆச்சரியமான விஷயத்தை குறிப்பிட்டார்.

அதாவது இந்த படத்தின் கதையை கேட்கும்போதே முக்கியமான தன்னுடைய கதாபாத்திரத்தை சத்யராஜ்தான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரிடம் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் அனுதீப் பாகுபலி கட்டப்பா போன்ற கதாபாத்திரத்தில் சத்யராஜை பார்த்து பழக்கப்பட்ட காரணத்தினால் இந்த படத்தில் உள்ள காமெடி கலந்த அந்த கதாபாத்திரத்திற்கு அவர் செட்டாக மாட்டார் என மறுத்தாராம்.

ஆனால் சிவகார்த்திகேயன் நீங்கள் கட்டப்பாவைத்தான் பார்த்துள்ளீர்கள்.. அவர் தமிழில் நடிகன், அமைதிப்படை உள்ளிட்ட படங்களில் கலக்கியவர் என்கிற உண்மையை அனுதீப்புக்கு சொல்லி இந்தப் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபர் அவர்தான் என்று கூறியதும் தான் இயக்குனர் சத்யராஜை இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க அனுதீப் ஒப்புக்கொண்டாராம். இந்த தகவலை மேடையில் பேசிய சத்யராஜே சொன்னது தான் இதில் ஹைலைட்.