தமிழக மக்களில் பெரும்பாலோரின் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் நாவல் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி அதன் முதல் பாகமும் வெளியானது. இந்த படத்திற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர்

இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இயக்குனர் மணிரத்னம் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்து உள்ளது. அந்த வகையில் கதாநாயகர்கள், நாயகிகளை தவிர்த்து முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது அதில் கலந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினி மணிரத்னம் இந்தப்படத்தை இயக்குகிறார் என்று செய்தி வந்ததுமே, அவரிடம் தனக்கு பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று தன் ஆசையை வெளிப்படுத்தியதாக கூறியிருந்தார்.

ஆனால் மணிரத்னம் அப்படி செய்தால் ரஜினி ரசிகர்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் என்று கூறி அவருக்கு அந்த வாய்ப்பை தரவில்லை. அந்த கதாபாத்திரம் சரத்குமாருக்கு சென்றது. இந்த நிலையில் படத்தில் நடித்த அனைவரையுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சரத்குமாரும் அவரது மகள் வரலட்சுமியும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது நீண்ட நேரம் பல விஷயங்கள் குறித்து சரத்குமாரும் சூப்பர் ஸ்டாரும் பேசியுள்ளனர்.

இதுபற்றி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறும்போது, ‘இன்றைய நாள் மிக சிறப்பாக தொடங்கியது. சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பெரிய பழுவேட்டரையர் வேடம் குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அதன்பிறகு காபி அருந்திக் கொண்டு எங்களது தொழில் பற்றி நட்பு ரீதியாக பேசிக்கொண்டோம். அப்பொழுது எங்கு உள்ளது எனது மகள் வரலட்சுமியும் உடன் இருந்தார்.
அவர் நடித்து வரும் படங்கள் குறித்தும் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டறிந்தார் இப்படி எங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்கி ரஜினிக்கு என்னுடைய நன்றி” என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார்.

அரசியல் ரீதியாக பெரும்பாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிரான கருத்துக்களையே சரத்குமார் எப்போதும் தெரிவித்து வந்தார். ஆனால் அரசியல் வேறு, சினிமா வேறு நட்பு வேறு என்பதை தனித்தனியாக பிரித்து வைத்திருக்கும் சரத்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினியை தானே நேரில் சென்று சந்தித்தது அவர் மீது அவர் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.