கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த சந்தானம் அதன்பிறகு தற்போது கதாநாயகனாக மாதிரி படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாகவே மட்டும் தொடர்ந்து நடித்து வரும் சந்தானம் இதற்குமுன் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து சலாலா மொபைல்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கன்னடத்திலும் அடியெடுத்து வைத்துள்ள சந்தானம் அங்கே கிக் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கி வருகிறார். தமிழ் கன்னடம் என இரு மொழிப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் தற்போது சாட்டர்டே இஸ் கம்மிங்கு என்கிற பாடலை பாடியுள்ளதன் மூலம் ஒரு பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சந்தானம். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

கிக் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் என்பவர் நடித்துள்ளார் நாயகன், நாயகி இருவருமே விளம்பரத்துறையில் பணியாற்றும் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி என பல காமெடி நடிகர்களும் நிறைந்துள்ளதால் 100 சதவீத காமெடிக்கு இந்த படம் உத்தரவாதம் தரும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.




















