வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் சினிமாவிலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணித்து வருகிறார். அந்தவகையில் கடந்த செப்டம்பர் 15 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்த படத்தின் வெற்றிக்காக நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றைப் பரிசளித்தார் ஐசரி கணேஷ்.
இந்த நிலையில் இன்று ஐசரி கணேஷ் பிறந்தநாள் என்பதால் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்தநிலையில் தற்போது சிம்பு பெல்லாரியில் நடைபெற்றுவரும் 10 தல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
ஐசரி கணேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கிருந்தபடியே இங்குள்ள தனது நபர்கள் மூலமாக மிகப்பிரம்மாண்டமான கேக் ஒன்றை தயாரித்து பூங்கொத்துடன் சேர்த்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் ஐசரி கணேஷுக்கு வழங்கி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.