V4UMEDIA
HomeNewsKollywoodபொன்னியின் செல்வன் வெற்றியால் சூட்டோடு சூடாக ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்ய லட்சுமியின் அம்மு

பொன்னியின் செல்வன் வெற்றியால் சூட்டோடு சூடாக ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்ய லட்சுமியின் அம்மு

மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இயல்பான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்று வருபவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஐஸ்வர்யாராய், திரிஷா இவர்களுக்கு அடுத்ததாக பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்ய லட்சுமி .

இந்த படம் வெளியான பின்பு ஐஸ்வர்ய லட்சுமிக்கான புகழ் இன்னும் கூடியுள்ளது என்று சொல்லலாம்.. இதை பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களிடம் இன்னும் வரவேற்பை பெறும் விதமாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள அம்மு என்கிற வெப்சீரிஸ் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது..

இதில் நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸை சாருகேஷ் சேகர் என்பவர் இயக்கியுள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இந்த வெப்சீரிஸை தயாரித்துள்ளார்.

இப்படம், துன்பங்களை எதிர்கொண்டு பீனிக்ஸ் பறவை போல எழும் பெண்ணின் கதையான ஒரு டிராமா த்ரில்லர் படமாகும். குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்ணாக இருந்து, அவளது உள் மோதல்களைக் கடந்து, அவளது உள வலிமையைக் கண்டறிந்து, அவளை துஷ்பிரயோகம் செய்யும் கணவனுக்குத் திருப்பிக் கொடுப்பதற்கு தயாராகும் ஒரு பெண்ணாக, அம்மு எப்படி சிலிர்ப்பான மாற்றத்தைக் காண்கிறாள் என்பதுதான் படத்தின் கதை.

Most Popular

Recent Comments