Home News Kollywood தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப்போன ருத்ரன் ரிலீஸ்

தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப்போன ருத்ரன் ரிலீஸ்

ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன். இந்த நிலையில் அவர் ருத்ரன் என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என முன்னர் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் என புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் அதிக அளவில் இருப்பதால் குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவது இயலாத காரியம் என்பதால் தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக படக்குழுவினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.