V4UMEDIA
HomeNewsKollywoodகூல் சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐசரி கணேஷ்

கூல் சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐசரி கணேஷ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. கேங்ஸ்டர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்காக சிம்பு தன்னை மிகப்பெரிய அளவில் உருமாற்றம் செய்துகொண்டு நடித்திருந்தார்.

இந்த படத்தில் மல்லிப்பூ என்கிற பாடல் மிகப் பெரிய வரவேற்பு பெற்று தற்போது அதிக அளவு ரசிகர்களால் கேட்கப்படும் பாடலாக மாறியுள்ளது. இந்த படத்தைப் பொருத்தவரை மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் அதற்கான விளம்பரம், பப்ளிசிட்டி போன்றவை பெரிய அளவில் நடைபெறவில்லை.

ஆனால் அதேசமயம் நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ் என்பவர் வெவ்வேறு திரைப்படங்களை பார்க்க செல்லும் போதெல்லாம், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும்போதெல்லாம் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி சில வார்த்தைகளை பேசிவிட்டு தான் மற்ற விஷயங்களை பேசுவார்.

அந்த அளவிற்கு அவர் சிம்புவையும் வெந்து தணிந்தது காடு படத்தையும் ரொம்பவே சிலாகித்து பேசிவந்தார். இது படத்திற்கு மிகப்பெரிய பப்ளிசிட்டி ஆக அமைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்கு ரொம்பவே உதவியாக இருந்ததாக கூறி கூல் சுரேஷை அழைத்து அவருக்கு விலை உயர்ந்த ஐபோன் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அவருக்கு ஐபோன் வழங்கியதை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் ஐசரி கணேஷின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாயகன் சிம்புவுக்கு கார் ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு பைக் ஒன்றையும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Most Popular

Recent Comments