V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் ராஜமவுலிக்கு அதிர்ச்சி தந்த மணிரத்னம்

இயக்குனர் ராஜமவுலிக்கு அதிர்ச்சி தந்த மணிரத்னம்

வரலாற்று படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் ஆளாக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி தான், அதற்குமுன் ஐம்பதுகளில் வரலாற்று படங்கள் அதிகமாக வந்த நிலையில் கடந்த 50 வருடங்களாக வரலாற்று படங்களே பெரிய அளவில் வெளியாகவில்லை என்று சொல்லலாம்.

அந்த சமயத்தில் பாகுபலி படத்தை எடுத்து இரண்டு பாகங்களாக வெளியிட்டு பிரமிக்க வைத்தார் இயக்குனர் ராஜமவுலி. அந்த அந்த இரண்டு பாகங்களில் சொல்லப்பட மொத்த கதையையும் படப்பிடிப்பு நடத்துவதற்கு கிட்டத்தட்ட 600 நாட்கள் தேவைப்பட்டது என்று அப்போது கூறியிருந்தார் ராஜமவுலி.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் முயற்சியில் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் பிரமாண்ட திரைப்படமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. வரும் 10ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் இந்தப்படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி பேசும்போது, “ ஒரு முறை இயக்குனர் ராஜமவுலியை நேரில் சந்தித்தபோது அவரிடம் பொன்னியின் செல்வன் உருவான விதம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இந்த படம் 150 நாட்களிலேயே படப்பிடிப்பு நடத்தி முடித்தோம் என்று கூறினேன்.

அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நிஜமாகவா..? பொய்தானே சொல்கிறீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டார். அப்படி குறைந்த நாட்களில் படமாக்கி முடிப்பதற்கான எங்களது திட்டம் குறித்தெல்லாம் ராஜமவுலி ஆர்வமாக கேட்டு அறிந்துகொண்டார்” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments