HomeNewsKollywoodவெங்கட்பிரபு பட தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு

வெங்கட்பிரபு பட தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு

மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த வெங்கட்பிரபு அடுத்ததாக எந்த பெரிய ஹீரோவை வைத்து இயக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் திடீரென தெலுங்கு சினிமாவில் படம் இயக்கும் வேலைகளில் இறங்கி ஆச்சரியம் அளித்தார். ஒரு பக்கம் தமிழ் முன்னணி ஹீரோக்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்க இயக்குனர்களான ஷங்கர், வெங்கட்பிரபு போன்றோரும் தெலுங்கில் தங்கள் முதல் அடியை எடுத்து வைத்துள்ளனர்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட்பிரபு. இந்த படத்தில் கதாநாயகியாக கீரீத்தி ஷெட்டி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

இந்தப்படத்திற்கு மாஸ்ட்ரோ’ இளையராஜாவும், ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை.

அதேசமயம் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப குழு விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது இந்த நிலையில் தொழில்நுட்பக் குழு விபரங்களை மட்டும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான SR கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார். படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு திறமை மிக்கவரான ராஜீவை தேர்வு செய்துள்ளது. கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் இதில் அங்கமாக உள்ளார். நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments