தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து இயக்கியவர் இயக்குனர் குணசேகர். ராணி ருத்ரமாதேவி என்கிற வரலாற்று படத்தை இயக்கிய குணசேகர் தற்போது வரலாற்று காவியமான மகாபாரதத்தில் இடம் பெற்ற சாகுந்தலம் என்கிற கதையை அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார். சகுந்தலை, துஷ்யந்தன் மகாராஜா இருவரை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்த மகாராஜாவாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் சச்சின் கேடேகர், கபீர் பேதி, மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ‘அல்லு அர்ஹா’ இளவரசர் ‘பரதர்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் உள்ள கஷ்யப்பா கணுமாலுவில் நடைபெற்றுள்ளது இந்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது