தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. பிரபல இயக்குனர் ஷங்கரின் சீடராக பணியாற்றிய இவர் அடுத்தடுத்து நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை பிரமாண்டமாக இயக்கினார். தெறி, மெர்சல், பிகில் என இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றன.

இதைத் தொடர்ந்து ஒரு இயக்குனராக அவரது கமர்ஷியல் வேல்யூ மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அதன் பலனாக அவருக்கு இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து. தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று அட்லி தனது பிறந்தநாளை ஜவான் படப்பிடிப்பில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் நடிகர் விஜய்யும் அட்லியின் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அட்லியுடன் ஒரு பக்கம் ஷாருக்கான், ஒரு பக்கம் விஜய் என இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
அட்லியின் முகத்தில் காணப்படும் சந்தோசமும் மகிழ்ச்சியும் அட்லிக்கு இந்த பிறந்தநாள் மிகப் மறக்க முடியாத நாளாக மாறி இருக்கும் என தெரிவிக்கிறது. இதுகுறித்து அட்லி கூறும்போது இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.