இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றிய வசந்தபாலன் ஆல்பம் படம் மூலமாக திரையுலகில் நுழைந்தாலும் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்றுக்கொடுத்தது அடுத்ததாக அவர் இயக்கிய வெயில் திரைப்படம் தான். நடிகர் பரத்துக்கும் வெயில் படம் அந்த சமயத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் வெற்றி அதற்கடுத்ததாக வெளியான அங்காடித்தெரு ஆகிய படங்களின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறினார்.
இந்த 20 வருடங்களில் 6 படங்களை மட்டுமே இயக்கி உள்ள வசந்தபாலன் கடைசியாக இயக்கிய ஜெயில் திரைப்படம் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இந்த படத்தில் 16 வருடங்களுக்கு பிறகு அவரது டைரக்ஷனில் இணைந்து கதாநாயகனாக நடிக்கிறார் பரத்.
தற்போது மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் நடிப்பது குறித்து பரத் கூறும்போது, “2006ல் வெயில் படம் மூலம் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியவர் வசந்தபாலன். என்னுடைய அடுத்த படத்தில் அவர் முக்கியமாக மனிதராக இருப்பதில் மகிழ்ச்சி> என்று கூறியுள்ளார்.