கடந்த ஒரு மாதமாக விக்ரம் பெரும்பாலும் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தான் இருக்கிறார். குறிப்பாக அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா கர்நாடகா என மாறிமாறி பறந்து வந்தார் விக்ரம் அதையெல்லாம் விட இன்று அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று தான் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆம். விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்ல திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம்.

இந்நிலையில் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் =வர்ஷினியின் திருமணத்தில் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்