V4UMEDIA
HomeNewsKollywoodசசிகுமார் பட இயக்குனர் டைரக்சனில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகிபாபு

சசிகுமார் பட இயக்குனர் டைரக்சனில் கதையின் நாயகனாக நடிக்கும் யோகிபாபு

தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் மிகவும் பிசியான காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர், தளபதி விஜய் உடன் வாரிசு ஆகிய படங்களில் இணைந்து நடித்து வருகிறார். இது தவிர இன்னும் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவரை கதாநாயகனாக வைத்து பல படங்கள் உருவாகி வருகின்றன.

தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து கதையின் நாயகனாக நடித்து வரும் யோகிபாபு, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை கே.வி.கதிர்வேல் என்பவர் இயக்குகிறார். இவர் சசிகுமார் நடித்த ராஜவம்சம் படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தை பிரபல நடன பள்ளியான நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்கிறது. இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சென்ராயன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் சாம்ஸ், நடிகை நிரோஷா, மற்றும் இயக்குனர் சுராஜ் போன்ற திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்

Most Popular

Recent Comments