சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அவரது 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் துவங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாக இருப்பதை இந்த மோஷன் போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்தப்படத்தில் வித்தியாசமான பெயர்கள் கொண்ட வரலாற்று மனிதர்களின் கதாபாத்திரங்கள் இடம் பெறுவதையும் காண முடிகிறது. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது 3டி டெக்னாலஜியில் உருவாகும் இந்த படம் 10 மொழிகளில் தயாராக இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது

மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிவா இயக்குகிறார். வலிமை மிகு வீரம் எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ளது.


























