நடிகர் வடிவேலு ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நகைச்சுவை புயலாக தமிழ் திரையுலகில் நுழைந்து சில படங்களில் நடித்து வருகிறார். அதில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படமும் ஒன்று.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட இரண்டு படங்கள் மூலமாக ரசிகர்களின் நம்பிக்கை பெற்ற இயக்குனராக மாறிய மாரிசெல்வராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் PAஹத பாசில் வில்லனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் செல்வராஜ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தலைவாழை இலைபோட்டு விருந்து சாப்பிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகின்றன