விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு ஸ்டைலிஷ் ஆன படங்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குனர் கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்தனானி என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் சினிமா சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வேல்ஸ் யுனிவர்சிட்டி வளாகத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே வேல்ஸ் குழுமத்துடன் நல்ல நட்பில் இருக்கும் கமலுக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நேரிலேயே சென்று அழைப்பு விடுத்துள்ளார் ஐசரி கணேஷ்.

இதற்கு முன் ஐசரி கணேஷ் தயாரித்த படங்களை, தான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் புரமோஷன் செய்தது குறிப்பிடத்தக்கது