கேப்டன் விஜயகாந்திற்கு அடுத்ததாக அதிகப்படியாக போலீஸ் கதாபாத்திரங்களில் நடிக்கும் பாக்கியமும் பெருமையும் அருண்விஜய்க்கு தான் கிடைத்திருக்கிறது என்று சொல்லவேண்டும். அந்த வகையில் தொடர்ந்து போலீஸ் அதிகாரி படங்களாக நடித்து வருகிறார் அருண்விஜய்.

சமீபத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெளியாக உள்ள சினம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அருண்விஜய். இந்த படம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஜி என் ஆர் குமரவேலன் இந்த படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வனி என்பவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் தரமான ஆக்ஷனுக்கு இந்த படம் உத்தரவாதம் தரும் என கூறும் விதமாக அமைந்துள்ளது.

படம் வெளியாக இன்னும் 15 நாட்களே இருப்பதால் இந்த படத்தை புரமோட் பண்ணும் விதமாக வெளியூர் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார் அருண்விஜய்.

அந்த வகையில் இன்று கோவையில் உள்ள ஒரு மிகப்பெரிய திரையரங்கிற்கு சென்று இந்தப்படத்தின் புரமோஷனை துவங்கியுள்ளார் அருண்விஜய்.

இதேபோலத்தான் தனது யானை படம் வெளியான சமயத்தில் அருண்விஜய்யும் இயக்குனர் ஹரியும் இதேபோல பல மாவட்டங்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து படத்தை புரமோட் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
