கொரோனா அலையின் இரண்டு தாக்கங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் தமிழ் சினிமாவும் திரையரங்குகளும் முழுவீச்சில் இயங்கி வருகின்றன. இதற்கு பின்னர் வெளியான படங்கள் எல்லாமே ரசிகர்களை ஓரளவு கவர்ந்துள்ளதுடன் மிகப்பெரிய வெற்றியையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் விக்ரம், விருமன் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அடிதடி சண்டைகள், வன்முறை, குத்து பாடல் என வழக்கமான மசாலாக்கள் எதுவும் இன்றி ஒரு பீல் குட் படமாக அழகான நட்பை விவரிக்கும் ஒரு படமாக இது உருவாகி இருப்பதால் இன்றைய இளைஞர்களின் மனதில் எளிதாக இந்த படம் நுழைந்து விட்டது.

மிக சாதாரண கதை தான் என்றாலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக அமைந்து விட்டதால் அவர்களது வாய்மொழி மூலமாகவே இந்த படத்திற்கான பப்ளிசிட்டி அதிகரித்து வருகிறது.

இதனால் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் திருச்சிற்றம்பலம் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக தியேட்டர் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.