V4UMEDIA
HomeNewsKollywoodஇனி ஷூட்டிங் தான் ; ஏர்போர்ட்டில் ஜெயிலர் அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார்

இனி ஷூட்டிங் தான் ; ஏர்போர்ட்டில் ஜெயிலர் அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார்

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்கிற தகவல் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதேசமயம் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா, மோகன், யோகிபாபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படம் எப்போது துவங்கும், எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி அங்கிருந்து சென்னை திரும்பியதும் ஏர்போர்ட்டில் நிருபர் ஒருவர் ஜெயிலர் படம் குறித்து கேட்ட கேள்விக்கு இனிமே ஷூட்டிங் தான் பாக்கி என புதிய அப்டேட் தகவலை புன்னகையுடன் தந்தபடி கிளம்பி சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதனைத் தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Most Popular

Recent Comments