தமிழ் சினிமாவில் அவ்வப்போது பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் களமிறங்குவது வழக்கமாக நடந்து வரும் ஒன்று தான். குறிப்பாக டைரக்ஷன் துறையை தேர்ந்தெடுப்பதை விட நடிகர் ஆவதற்கே பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர்.
கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ள விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
அதேசமயம் சினிமாவில் கதாநாயகியாக நுழைவதற்காக தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள நடனமும் கற்றுள்ள அதிதி கூடுதலாக அந்த படத்தில் ஒரு பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டே பாடலும் பாடும் கதாநாயகிகள் ரொம்பவே குறைவு.
அப்படி இருப்பவர்கள் கூட மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட வெகு சிலரே அதே சமயம் அதிதி சங்கர் கூறும்போது, நடிப்பு எப்படி எனக்கு முக்கியமோ அதேபோல பாட்டும் எனக்கு முக்கியம் தான். இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.