HomeNewsKollywoodஜெயம் ரவி ஜோடியானார் பிரியங்கா மோகன்

ஜெயம் ரவி ஜோடியானார் பிரியங்கா மோகன்

குறுகிய காலத்திலேயே வெற்றி படங்களில் நடிப்பதுடன் தங்களது நடிப்பாலும் வசீகரத் தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகை வரிசைக்கு உயர்பவர்கள் வெகு சிலரே. அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இடம் பிடித்திருப்பவர் பிரியங்கா மோகன்.

சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்து நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அவர் அடுத்ததாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் என மூன்று படங்களில் நடித்து முத்திரை பதித்தார்.

இந்த நிலையில் அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் பிரியங்கா மோகன். இதன் துவக்க விழா பூஜையில் பிரியங்கா மோகன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நட்டி நடராஜ் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் கேரளாவில் துவங்க இருக்கிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments