கடந்த வெள்ளியன்று அதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் என்கிற படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ட்ரிக்கர் என்கிற படம் தற்போது ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

டார்லிங், கூர்கா உள்ளிட்ட கமர்சியல் வெற்றி படங்களை இயக்கிய ஷாம் ஆண்டன், 100 படத்திற்கு பின் இந்த படத்தில் மீண்டும் அதர்வாவுடன் இணைந்துள்ளார் சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க முக்கிய வேடங்களில் அருண்பாண்டியன், முனீஸ்காந்த், வினோதினி உள்ளிட்ட பலன் அளிக்கின்றனர் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இரும்புத்திரை, சர்தார் படங்களை இயக்கிய பி.எஸ் மித்ரன் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் என்பதுதான். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.