தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமல்லாவது மற்ற கதாநாயகிகளின் நடிக்க தயங்கும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமி பிரியா சந்திரமௌலி.

கனமான கதாபாத்திரங்கள் என்றால் இவரை நம்பி ஒப்படைக்கலாம் என்பது போல, தான் ஏற்றுக் கொண்ட வேடங்களுக்கு உண்மையான நடிப்பை வழங்குபவர்.
கடந்த 202௦ல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்கிற படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் லட்சுமி பிரியா.

தற்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமௌலிக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் யாமா என்கிற படத்தின் குழுவினர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மிக பொருத்தமானவரான லட்சுமி பிரியா சந்திரமௌலி இதுபோன்ற பல உயரிய விருதுகளை வென்று சிறந்த நடிகைக்கான பல உச்சங்களை தொடுவார் என வாழ்த்துகிறோம் என அவர்கள் வாழ்த்தி உள்ளனர்.