தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 இன்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தபடியே அவர்களுக்கு எதிர்பார்த்த பரிசுகள் கிடைத்து விட்டன. ஆம் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள, அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் மூன்று படங்களில் இருந்து இந்த பரிசுகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
குறிப்பாக தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் நடித்த வரும் சார் (தமிழில் வாத்தி) என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. கூடுதல் போனஸ் ஆக இன்று அந்த படத்தின் டீசர் வெளியாகி நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என சொல்லும் விதமாக ரசிகர்களை கவர்ந்து விட்டது.
இன்னொரு பக்கம் மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது நடித்துள்ள படம் நானே வருவேன்.
இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது.
இது தவிர, ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளது.