தற்போது திரைப்படங்களுக்கு இணையாக வெப் தொடர்களும் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக சினிமாவில் கூட வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு யோசிக்கும் நட்சத்திரங்கள் அல்லது வாய்ப்பு கிடைக்காதவர்கள் இதுபோன்ற வெப் தொடர்களில் தங்களுக்கு விருப்பப்பட்ட கதாபாத்திரங்களில் எந்தவித தயக்கமும் இன்றி நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் வெப் என்கிற பெயரிலேயே உருவாகியுள்ள வெப் தொடரில் நட்டி நடராஜ், கிட்டத்தட்ட ஆண்ட ஹீரோவாக சொல்லப்போனால் வில்லனாகவே நடித்துள்ளார் என்று சொல்லலாம்.
தற்போது வெளியாகியுள்ள வெப் படத்தின் டீசரை பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. இந்த வெப் தொடரின் டீசரை இயக்குனர் செல்வராகவும் வெளியிட்டுள்ளார்
ஹாரூன் என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் என்கிற வெப்சீரிஸில் ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் சாஸ்வி, சுபப்பிரியா, அனன்யா மணி உள்ளிட்ட மற்ற மூன்று கதாநாயகிகளும் நடித்துள்ளனர். மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெண்கள் கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த வெப் தொடர் பூனை எலி ஆட்டத்தை போல நட்டியும் அவர்களிடம் சிக்கிக் கொண்ட நாலு பெண்களும் என்கிற விதமாக விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்கள் கடத்தல் அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதற்காகவா அல்லது அவர்களிடம் இருந்து உறுப்புகளை பறித்து விற்பனை செய்வதற்காகவா என்கிற கதாநாயகி கேள்வியுடன் இந்த டீசர் வெளியாகி உள்ளது. நிச்சயம் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.