கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி ஓடிடியில் வெளியான பூமி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால். இன்னொரு பக்கம் சிம்புக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது உதயநிதி கதாநாயகனாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி உள்ள கலகத்தலைவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதற்கு முந்தைய இரண்டு படங்களிலும் நிதி அகர்வாலுக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியிருந்தார்.

அதே சமயம் இவருக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் கலகத்தலைவன் படத்தில் அவருக்கான டப்பிங்கை நிதி அகர்வாலே பேசுவார் என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.