அருள்நிதி காட்டில் மழை என்பது போல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த டி பிளாக் என்கிற திரைப்படம் வெளியானது. அந்தப்படம் ரசிகர்களை கவர்ந்ததோ இல்லையோ, கடந்த வெள்ளியன்று வெளியான தேஜாவு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீனி போட்டுள்ளது என்று சொல்லலாம்.
இந்த படத்திற்கான வெற்றி விழாவையும் அருள்நிதி உள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடி விட்டனர். இந்த நிலையில் அடுத்ததாக அருள்நிதி நடிக்க நடித்துள்ள டைரி என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸின் 15 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்ட அந்த மேடையிலேயே டைரி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் அமீர்கானும் உலக நாயகன் கமல்ஹாசனும் கூடவே நடிகர் விக்ரமும் கலந்து கொண்டு இந்த ட்ரெய்லரை வெளியிட்டனர்.