V4UMEDIA
HomeNewsKollywoodஎத்திராஜ் கல்லூரி மாணவிகளை உற்சாகப்படுத்திய சீதாராமம் படக்குழு

எத்திராஜ் கல்லூரி மாணவிகளை உற்சாகப்படுத்திய சீதாராமம் படக்குழு

மகாநடி படத்தை தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்துள்ள இரண்டாவது படம் சீதாராமம். இந்த படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க, ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹனுராகவபுடி என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது துவங்கியுள்ளன அதன் ஒருபகுதியாக இன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

விழா அரங்கு முழுவதும் கல்லூரி மாணவிகள் பின்னணியில்கள் ஆர்ப்பரிக்க, துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் அவர்களுடன் மெகா செல்பி எடுத்துக் கொண்டது தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். போர் பதற்றம் நிறைந்த எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது

Most Popular

Recent Comments