சரண் இயக்கத்தில் கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் மூலமாக நடன இயக்குனராக அறிமுகமானவர் ஷோபி மாஸ்டர். இவரது மனைவி லலிதா. இவரும் நடன இயக்குனர் தான். பல பிரம்மாண்டமான படங்களிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடன இயக்குனராக பணியாற்றியவர்கள் ஷோபி மற்றும் லலிதா.
தற்போது இருவரும் இணைந்து ஒரு நடன பள்ளியையும் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கர்ப்பிணியான லலிதா ஷோபி மாஸ்டருக்கு கோலாகலமான வளைகாப்பு நடைபெற்றது.
இதை அடுத்து தற்போது இந்த தம்பதியருக்கு இரண்டாவதாக அழகான ஆண் குழந்தை ஒன்று. நடந்துள்ளது. தாய், சேய் இருவரும் பூரண நலத்துடன் உள்ளனர். குழந்தைக்கும் தம்பதிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.