V4UMEDIA
HomeNewsKollywoodரங்கோலி படப்பிடிப்பு முடிவடைந்தது

ரங்கோலி படப்பிடிப்பு முடிவடைந்தது

இயக்குனர் விஜய் மற்றும் அவரது சகோதரர் உதயா ஆகியோரின் சகோதரி மகனான ஹமரேஷ் என்பவர் முதன்முறையாக ரங்கோலி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை வாலி மோகன்தாஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரார்த்தனா நடிக்க, முக்கிய பாத்திரத்தில் ஆடுகளம் முருகதாஸ் நடித்துள்ளார்,

இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

Most Popular

Recent Comments