இந்தியில் ஆமீர்கான் தற்போது ‘லால் சிங் சத்தா’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.. அவரே தயாரிக்கும் இந்தப்படத்தை அத்வைத் சந்தன் என்பவர் இயக்கி வருகிறார். கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா நடித்திருக்கிறார்.
ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் வரும் ஆக-11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தற்போது தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா ரிலீசை குறிவைத்து தங்களது படங்களை வெளியிடுகின்றன.
அந்த வகையில் ஆமீர்கான் படமும் தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது தமிழில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெரிய அளவில் வெளியிடுகிறது.