இயக்குனர் சசி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இயக்கிய பூ என்கிற படத்தில் கதாநாயகன் ஸ்ரீகாந்தின் தந்தையாக நடித்து ஒரு நடிகராக அறிமுகமானவர் பூ ராமு. அந்த படத்தில் நடித்ததில் இருந்து பூ ராமு என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

எதார்த்தமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகவும் தேர்ந்தவர். குறிப்பாக சூரரைப்போற்று, பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பூ ராமு. எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும் இன்னும் சில முகங்கள் கொண்ட பூ ராமு இன்று காலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர் இன்று மாலை காலமானார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தை சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு மனைவி ஒரு மகளும் உள்ளனர்.