HomeNewsKollywoodவெங்கட்பிரபுவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவம்

வெங்கட்பிரபுவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவம்

ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை மலையாள திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் பல முன்னணி நடிகர்களும் இந்த கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளனர். அந்த பட்டியலில் நேற்று லேட்டஸ்டாக இணைந்துள்ளனர் இயக்குனர் வெங்கட்பிரபு.

சென்னை-28 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாநாடு வரை ரசிகர்களை என்டர்டெய்ன் செய்யும் விதமாகவே தனது படங்களை இயக்கி வருகிறார் அதிலும் குறிப்பாக மாநாடு படத்தில் இஸ்லாமியர்கள் பக்கம் ஒருதலைபட்சமாக குற்றம்சாட்ட வேண்டாம் என்பது போன்ற கருத்தை மையமாக வைத்து மாநாடு படத்தை வெற்றிப்படமாக கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments