கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியானது கல்லூரி பின்னணியில் உருவாகியிருந்த இந்த கதை இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்பத்து உறுப்பினர்களையும் கவர்ந்துவிட்டது.

குறிப்பாக இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரின் நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோக்கள் வரிசைக்கும் உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே டான் படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் அதன் இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இருவரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போனில் அழைத்து பாராட்டியதாக சிவகார்த்திகேயனை கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு இருவரையும் அழைத்து மனம்விட்டு பேசி படத்தை பாராட்டி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த 60 நிமிடங்களும் என் வாழ்வில் பொன்னான தருணம் என சிவகார்த்திகேயன் நெகிழ்ந்துபோய் கூறியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியை பொறுத்தவரை நல்ல படைப்புகளையும் திறமையானவர்களையும் எங்கிருந்தாலும் அழைத்து பாராட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே.