HomeNewsKollywoodடான் படம் பார்த்து கண்கலங்கிய சூப்பர்ஸ்டார் ரஜினி

டான் படம் பார்த்து கண்கலங்கிய சூப்பர்ஸ்டார் ரஜினி

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படம் வெளியானது. இந்த படம் வழக்கம் போல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் தியேட்டருக்கு அழைத்து வரும் படமாக அமைந்துவிட்டது.

படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா அருள்மோகன் மற்றும் முக்கிய வேடங்களில் நடித்த எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி என பலருக்கும் இந்த படம் பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது. அதுமட்டுமல்ல குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கியதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் தெலுங்கு புரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற சிவகார்த்திகேயனும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் தெலுங்கு மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் எதிர்பாராத விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினி எங்களுக்கு போன் செய்து பாராட்டினார். குறிப்பாக கடைசி 30 நிமிடங்களில் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்களான எங்களுக்கு இதைவிட வேறென்ன பாராட்டு இருக்கமுடியும்.. படத்தில் கூட நாங்கள் கிட்டத்தட்ட எட்டு இடங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பெயரை,  வசனத்தை, பாடல்களை பயன்படுத்தி இருந்தோம் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments