V4UMEDIA
HomeNewsKollywood3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்களாக மாறி இப்போது அவை தளபதி மக்கள் இயக்கமாக உருவெடுத்து சமூகத்திற்கு பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் 15 புதிய கிளைமன்றம் திறந்து வைத்தார்.

மேலும் 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி நாணயம் பரிசு, கல்வி உதவி தொகை ,வேட்டி, சேலை ,மரக்கன்றுகள் ,மளிகை பொருட்கள், முதியோர்களுக்கு உதவித்தொகை, அன்னதானம் 1000 பேருக்கும்  வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியயை நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் நாதன் ,இளைஞர் அணி தலைவர் பிரபு விக்னேஷ், மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவர் கந்தசாமி, செயலாளர் லோகேஷ்வரன், து.செயலாளர் தரனேஷ்குமார், தொண்டரணி கலை, ராஜா, பரத், ராமச்சந்திரன் .சௌந்திரராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்தும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…

Most Popular

Recent Comments