வீரமே வாகை சூடும் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் லத்தி. இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கியுள்ளார், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர்கள் ராணா, நந்தா இருவரும் இணைந்து தங்களது ராணா புரோடக்சன் சார்பில் தயாரித்துள்ளனர்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வட சென்னையில் சண்டைக்காட்சிகள் படமானபோது விஷாலுக்கு காயம் ஏற்பட்டு, அதற்காக அவர் கேரளா சென்று மூலிகை சிகிச்சை எடுத்து குணமாகி திரும்பி வந்து மீண்டும் இந்த படத்தில் நடித்தார் என்று செய்திகள் வெளியாகின. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.