Home News Kollywood சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் பான் இந்திய படமாக உருவாகும் வள்ளிமயில்

சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் பான் இந்திய படமாக உருவாகும் வள்ளிமயில்

முன்னணியில் உள்ள ஹீரோக்கள் அனைவருமே பான் இந்தியா ரிலீஸ் என்கிற பார்மெட்டுக்குள் வர ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ஏற்கனவே தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட்டும் மலையாளத்தில் வரவேற்பும் கொண்ட விஜய் ஆண்டனியும் பான் இந்திய ஹீரோவாக மாறுகிறார்.

ஆம், சுசீந்திரன் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் ஆண்டனி நடிக்கும் வள்ளிமயில் என்கிற படம் தமிழில் தயாராகி இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், பாரதிராஜா இருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு படத்தில் கதாநாயகியாக நடித்த பரியா அப்துல்லா இந்த படத்தில் கதாநாயகியாக அதாவது வள்ளிமயில் ஆக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, தம்பி ராமையா, மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளரான இமான் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். வரும் மே 16ஆம் தேதி முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.