நடிகர்களைப் பொறுத்தவரை பிரபுதேவா ஆச்சரியமான ஒருவர். டான்சர்களில் ஒருவராக கூட்டத்தில் ஆடியவர், பின்னர் டான்ஸராக தனி பாடலுக்கு ஆடினார். பின்னர் நடன இயக்குனராக மாறி நடிகர்களை ஆட்டுவித்தார். பின்னர் தானே நடிகராக மாறினார். அதன்பிறகு இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
இப்படி திரையுலகில் மூன்று விதமான துறைகளில் தனது முத்திரையை பதித்தவர் பிரபுதேவா. நடிகர் லாரன்ஸ் கூட இதே பாணியை பின்பற்றி தான் வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சமயத்தில் டைரக்சன் பணியை சற்று குறைத்துக் கொண்ட பிரபுதேவா நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தனது நெருங்கிய நட்பு வட்டாரத்திற்காக நடன இயக்குனராகவும் ஒரு படத்தில் ஒரு பாடல் என்கிற கணக்கில் பணியாற்றி வருகிறார் பிரபுதேவா. அந்த வகையில் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா.
இந்த படத்தில் சல்மான்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் இந்த பாடலில் சல்மான்கான், சிரஞ்சீவி இருவரையும் ஒன்றாக ஆட வைத்துள்ளாராம் பிரபுதேவா.
ஏற்கனவே சிரஞ்சீவியை வைத்து இந்தியில் வான்டட், தபாங்-3 உள்ளிட்ட படங்களை பிரபுதேவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.