உணர்வுப்பூர்வமான கதைகளையும் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையையும் நிஜத்திற்கு பக்கத்தில் நின்று படமாக்கி வருபவர் இயக்குனர் சீனு ராமசாமி. அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் சீனு ராமசாமி.
இவர் இயக்கத்தில் அடுத்ததாக விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் மற்றும் இடிமுழக்கம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறியுள்ளார். முதல்வரை சந்தித்து விட்டு வந்தபின் முதல்வர் குறித்து கூறும்போது ஆளும் ஆண் தாய் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்வின்போது சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்
மேலும் இந்த சந்திப்பின் போது தான் எழுதிய கவிதை தொகுப்பு நூலையும் கொரோனா மற்றும் மழைக்கால பேரிடர் சமயங்களில் மு.க.ஸ்டாலின் எடுத்த துரிதமான அதிரடி நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக தான் நேசித்து படித்த ஜான் ரீடு என்பவர் எழுதிய ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ என்கிற புத்தகத்தயும் முதல்வருக்கு அவர் பரிசாக அளித்தார். பதிலுக்கு முதல்வரும் தன்னுடைய வரலாற்று நூலான உங்களில் ஒருவன் முதல் பாகத்தில் கையப்பமிட்டு சீனு ராமசாமிக்கு பரிசளித்துள்ளார்.