பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்தவகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோனை ஆடவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தார்கள்.

இந்த நிலையில் தமிழில் சன்னி லியோன் முழுக்க முழுக்க ஒரு படத்தின் கதாநாயகியாகவே நடித்துள்ளார்.
ஒ மை கோஸ்ட் என்கிற பெயரில் பேண்டசி ஹாரர் படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல… மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம் சன்னிலியோன். இந்த படத்தை ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் சன்னி லியோன் கதாபாத்திரத்திற்கு வரலாற்றுப் பின்னணி ஒன்றும் இருக்கிறதாம். அந்த மூன்று வேடங்களில் இதுவும் ஒன்று என்கிறார் இயக்குனர் யுவன்.

அதேசமயம் அந்த கதாபாத்திரத்தை முற்றிலும் கற்பனையாகவே உருவாகியுள்ளதாகவும் வேறு யாரையும் அது குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.