HomeNewsKollywoodகேரளாவில் பிகில் சாதனையை முறியடித்த பீஸ்ட்

கேரளாவில் பிகில் சாதனையை முறியடித்த பீஸ்ட்

கேரளாவை பொறுத்தவரை மோகன்லால், மம்முட்டி என அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகர் விஜய். அது எந்த அளவிற்கு என்றால் கேரளாவில் விஜய் படம் வெளியாகும்போது, வேறு எந்த பெரிய நடிகர்களின் படமும் அந்த சமயத்தில் வெளியாவதை தவிர்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு கேரள ரசிகர்களும் விஜய் படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல்-13ம் தேதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. தமிழ் விஜய் ரசிகர்களுக்கு சமமாக கேரள விஜய் ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாட இப்போதிருந்தே தயாராகி வருகிறார்கள்.

இந்த படத்திற்காக இப்போதுவரை 350 ரசிகர் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது இன்னும் சில தினங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னதாக விஜய் நடித்த பிகில் திரைப்படத்திற்கு கேரளாவில் 307 ரசிகர்மன்ற சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

அந்தவகையில் பிகில் படத்தின் சாதனையை பீஸ்ட் படம் இப்போதே முறியடித்து விட்டது என்று சொல்லலாம்..

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments