HomeNewsKollywoodநாகசைதன்யா படம் மூலம் தெலுங்கில் அடி எடுத்து வைத்த வெங்கட் பிரபு

நாகசைதன்யா படம் மூலம் தெலுங்கில் அடி எடுத்து வைத்த வெங்கட் பிரபு

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு. கடந்த நவம்பர் மாதம் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று 100 நாட்களையும் கடந்தது.

அதேசமயம் கொரோனா தாக்கம் பரவிய காலகட்டத்தில், மாநாடு படம் இயக்கி வந்த சமயத்திலேயே, ஒரு சிறிய பட்ஜெட் படமாக மன்மதலீலை என்கிற படத்தை இயக்கி அந்தப்படமும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

அடுத்ததாக அவர் யார் படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ள வெங்கட்பிரபு,  நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் துவக்க விழா பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. இந்தப்படம் தெலுங்கில் தயாரானாலும் தமிழிலும் நாக சைதன்யாவின் முதல் படமாக உருவாகிறது.

இயக்குனர் லிங்குசாமி, ஷங்கர் ஆகியோரை தொடர்ந்து தற்போது தெலுங்கிற்கு சென்ற இயக்குனர்கள் பட்டியலில் வெங்கட்பிரபுவும் இடம்பிடித்துள்ளார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments