தமிழில் அதிரடி ஆக்சன் படங்களை இயக்கியவர் லிங்குசாமி. மாதவனுக்கு ரன், விஷாலுக்கு சண்டக்கோழி, கார்த்திக்கு பையா என எல்லோருக்கும் ஒரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தமிழில் அடுத்தடுத்து இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2 படங்கள் அவருக்கு சரியான வெற்றியை கொடுக்க தவறின.

இந்தநிலையில் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர் ராம் பொத்திநேனி நடிக்கும் வாரியர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் உப்பென்னா புகழ் கதாநாயகி கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அவ்வபோது வெளியாகி வந்தன. இந்த நிலையில் போலீஸ் உடையில் கதாநாயகன் ராம் பொத்திநேனி இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு பக்கா போலீஸ் ஆக்ஷன் ஸ்டோரியாக இந்தப் படம் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்