ஈரம், அரவான் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் நடிகர் ஆதி. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் அவரது நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றனவே தவிர இன்னும் ஒரு நிலையான இடத்தை அடைய முடியாமல் தடுமாறித்தான் வருகிறார் நடிகர் ஆதி.
அதேசமயம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் ஓடிடி அடித்தளத்தில் கிளாப் என்கிற படம் வெளியானது. இதில் ஒரு அதெலடிக் கோச் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆதி. அதற்காக இவருக்கு நிறைய பாராட்டுகளும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் அடுத்ததாக தற்போது பார்ட்னர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஆதி. இந்த படத்தில் ஹன்சிகா மற்றும் பாலக் லால்வனி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முந்தைய படத்திற்கு நேர்மாறாக இந்தப்படம் முற்றிலும் காமெடி ஜானரில் உருவாகி வருகிறது.
இந்த படத்தை மனோஜ் தாமோதரன் என்பவர் இயக்குகிறார். இவர் நயன்தாரா நடித்த டோரா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இது காமெடி படம் என்றாலும் இந்த படத்தில் சயின்ஸ் ஃபிக்ஸன் கலந்த ஒரு ஃபேன்டஸி விஷயமும் இருக்கிறது என்று கூறுகிறார் மனோஜ் தாமோதரன்.