சமீபகாலமாக தனிப்பட்ட முறையில் ஒரு சினிமா பாடலைப் போல ஆல்பம் என்கிற பெயரில் வீடியோ பாடல் உருவாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு புகழ்பெற்ற நடிகர் அஸ்வின், இதுபோன்ற ஆல்பங்களில் நடித்து இன்னும் பிரசித்தி பெற்று, ஒரு படத்தின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அடிபொலி என்கிற ஆல்பத்தில் அஸ்வின் நடித்திருந்தார். அந்த பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை கவர்ந்து. அந்த ஆல்பமும் மிகப்பெரிய ஹிட்டானது.

அதன்பிறகு என்ன சொல்ல போகிறாய் என்கிற படத்தில் நடித்த அஸ்வின் இயக்குனர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். பின்னர் ஒரு வழியாக அதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில் தற்போது அஸ்வினும் பிக்பாஸ் லாஸ்லியாவும் இணைந்து நடித்துள்ள பேபி நீ சுகர் என்கிற ஆல்பம் வெளியாகியுள்ளது.

இதுவரை ஒரு மில்லியன் ரசிகர்கள் இந்தப்பாடலைப் பார்த்து ரசித்துள்ளார் அதேசமயம் இந்த பாடலுக்கான கமெண்ட்டுகளை பார்க்கும்போது அஸ்வின் நடித்த முந்தைய ஆல்பங்களுக்கு கிடைத்த வரவேற்பு இதில் இல்லை என்றே தெரிகிறது..

அதுவும் தவிர இந்த ஆல்பத்தில் லாஸ்லியாவின் எக்ஸ்பிரஸன்கள் ரொம்பவே செயற்கையாக இருப்பதாகவும் ரசிகர்களை கவரும் விதமாக இல்லை என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.