மகேஷ்பாபு, ராம்சரண், பிரபாஸ் என தற்போது உள்ள முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இந்த நிலையில் முதன்முதலாக இந்தியில் தான் இயக்கும் லைகர் என்கிற படத்தில் விஜய் தேவரகொண்டாவை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார் பூரி ஜெகன்நாத்..
ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை நடிகை சார்மி கவுர், இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹரும் இதில் ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது விஜய்தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஜேஜிஎம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக நடிக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கி அடுத்த வருடம் ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.