HomeNewsKollywoodபாகுபலி-2 முதல் நாள் வசூலை ஆர்ஆர்ஆர் தொட முடியாமல் போனதன் காரணம் இதுதான்

பாகுபலி-2 முதல் நாள் வசூலை ஆர்ஆர்ஆர் தொட முடியாமல் போனதன் காரணம் இதுதான்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் கூட்டணியில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ரசிகர்களின் வரவேற்புடன் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ஏற்கனவே பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பெற்ற வெற்றி காரணமாக, ஆர்ஆர்ஆர் படம், வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேசமயம் படம் வெளியான பின்னர் அதன் முதல் நாள் வசூல் நிலவரப்படி பாகுபலி-2 வசூலை இந்தப்படத்தால் தொடமுடியவில்லை என்று ரிப்போர்ட்கள் வெளியாகின.

அதற்காக பாகுபலி படத்தை விட ஆர்ஆர்ஆர் படத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.. பாகுபலி முதல் பாகம் வெளியான பின்பு, இரண்டாம் பாகம் வெளியாவதற்கு இடையே இருந்த காலகட்டத்தில் அதை பார்த்து ரசித்த அனைவரும் அதன் இரண்டாம் பாகத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் அளவுக்கு படமும் அதன் கிளைமாக்ஸும் அமைந்திருந்தது. குறிப்பாக பாகுபலியை கட்டப்பா ஏன் குத்தினார் என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

அதனால் இரண்டாம் பாகம் வெளியாகும் முதல்நாளே அதற்கான விடையை தெரிந்துகொள்ள அனைவரும் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர்.. அதுமட்டுமல்ல, முதல் பாகத்தின் மூலம் பாகுபலி, தேவசேனா, ராஜமாத சிவகாமி, கட்டப்பா, பல்வாள்தேவன் என அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு நன்கு பழக்கமாகியிருந்தனர். 

அதனால் பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியாகும் படம் என ரசிகர்களுக்கு ஆர்ஆர்ஆர் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.. ஆனால் ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் தமிழுக்கு புதியவர்கள். மகதீரா என்கிற மாவீரன் படம் மூலம் ராம்சரண் கூட, தமிழ் ரசிகர்களிடம் ஓரளவு அறிமுகம் பெற்றிருந்தாலும் ஜூனியர் என்டிஆரை பொறுத்தவரை தமிழுக்கு புதியவர் தான்.

இன்னொரு பக்கம் இந்தப்படம் சுதந்திர போராட்ட பின்னணியில் உருவாகி இருக்கிறது என ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வந்ததால், படம் வெளியான பின், ரிசல்ட் எந்த மாதிரி வருகிறது என பார்த்துக் கொண்டு அதன்பிறகு படத்தை பார்க்க செல்லலாம் என பலரும் நினைத்ததுதான் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் பாகுபலி படத்தின் வசூலை நெருங்க முடியாமல் போனதற்கு காரணம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments