ராட்சசன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்மு அபிராமி. தற்போது கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் அவர்களது மூன்றாவது படமாக உருவாகியுள்ள ‘பேட்டரி’.

இந்த படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவன் நடிக்க, முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி நடித்துள்ளார். இவர்கள் தவிர யோக ஜேபி, எம்.எஸ்.பாஸ்கர், நாகேந்திர பிரசாத், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தனது ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலையும் ஒரு அசிஸ்டென்ட் கமிஷனர், ஏழை இதய நோயாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும் மருத்துவ ஆராய்ச்சி மாணவி, சென்னையில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைகளை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இவர்கள் மூவரை சுற்றியே இந்த பேட்டரி படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கின்றன ஆனால் அவை எல்லாமே ஒரு புதிர் விளையாட்டு போல ஏன், எதற்கு, எப்படி என்ற ஆர்வத்தை தூண்டும்படியாகவும் பார்வையாளர்களின் இதயத்துடிப்பை செய்யும் விதமாகவும் இருக்கும் என்கிறார்கள்.

இந்த படத்தை மணிபாரதி இயக்கியுள்ளார் மே மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகிறது